கோலாலம்பூர்:
குறைகளை கேட்டு செயல்களை மேம்படுத்திக்கொள்வதற்கு அமைச்சரவை தயாராக இருக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அமைச்சரவையின் செயல்பாடுகள் மீது அனைத்து குறைகளையும் மாவட்டங்களையும் வரவேற்க அமைச்சரவை தயாராக இருக்கிறது. சொல்லப்படும் அனைத்து குறைகூறல்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
2025 மடானி அரசாங்கத்தின் ஓய்வு ஸ்தல சந்திப்பில் பேசிய அன்வார், கேபினெட் அமைச்சர்களின் செயல்திறன் குறித்து கல்வியாளர்கள், அரசாங்க ஊழியர்களிடமிருந்து ஒரு சுதந்திரமான, சுயேச்சை மதிப்பீட்டு அறிக்கைகளை பெற்றிருப்பதாக குறிப்பிட்டார்.
அமைச்சரவை செயல்பாடுகள் சிறப்பாக இருந்தாலும் நம்முடைய செயலாக்கங்களை இன்னும் மேம்படுத்திக்கொள்வதற்கு கடப்பாட்டையும் உறுதியையும் கொண்டிருப்பது அவசியம் என்று அன்வார் அறிவுறுத்தினார்.



















