நாட்டின் 11 மாநிலங்களுக்கு இரவு 9 மணி வரை இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை

பெட்டாலிங் ஜெயா:

நாட்டின் 11 மாநிலங்களுக்கு இன்று இரவு 9 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வானிலையை எதிர்கொள்ளும் மாநிலங்களாக பேராக் மற்றும் லாபுவானின் முழுப்பகுதி, கெடா, பினாங்கு, கிளந்தான், திரெங்கானு, பகாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், சரவாக் மற்றும் சபா ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளன.

அத்தோடு பகாங் மற்றும் சிலாங்கூர் ஆகிய மாநிலங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் அதன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய இந்த மழை எச்சரிக்கை வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here