வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப்பூங்கா துறையின் நடவடிக்கை: 431 மலேசியர்கள், 91 வெளிநாட்டினர் கைது

கோலாலம்பூர்:

Op Bersepadu Khazanah (OBK) என்ற குறியீட்டுப் பெயரில் நடத்தப்பட்ட வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் பாகுகாப்பு நடவடிக்கையில்
மொத்தம் 431 மலேசியர்கள் மற்றும் 91 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் இதன் விளைவாக 2021 முதல் இந்த ஆண்டு ஜூலை வரை மொத்தம் RM150 மில்லியன் பறிமுதல் செய்யப்பட்டதாக இன்று (அக் 14) நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறை ஆகியவை இணைந்து குறித்த சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தியதாக இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அமாட் கூறினார்.

வேட்டையாடுபவர்களிடமிருந்து வனவிலங்குகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தணிக்க OBK மூலம் நாங்கள் காவல்துறை மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் (NGO) நாம் எவ்வாறு ஒத்துழைக்கிறோம்,” என்று டத்தோ முஹமட் பக்தியார் வான் சிக் (PH-பாலிக் பூலாவ்) கேட்ட ஒரு கேள்விக்கு அவர் மேற்கூறியவாறு பதிலளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here