கோலாலம்பூர்:
தாமான் மலாவதி குடியிருப்புப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி, அம்பாங் ஜெயாவில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய 114 இடங்களில் ஒன்றாகும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
“நேற்று நிலச்சரிவு ஏற்பட்ட நிலத்தின் கட்டமைப்பைப் பார்த்தால், இது சுண்ணாம்புக் கல்லில் அமைந்துள்ளது. அதுபோல உலு கிள்ளானிலிருந்து பத்து மலை வரை உள்ள சுண்ணாம்புக் கற்கள் உள்ள மேடுகளில் இதுபோன்ற சுமார் 400-600 இடங்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் இந்த பகுதி நீண்ட சுண்ணாம்புக் கற்களைக் கொண்டுள்ளது. மாதக்கணக்கில் தண்ணீர் ஓடும்போது, நிலச்சரிவுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக அவர் மேலும் கூறினார்.








