புதுடெல்லி: இந்திய விமானப் படையில் ப்ளைட் லெப்டினன்டாக பணிபுரிந்த தீன் தயாள் தீப், ஆக்ராவில் உள்ள அதிகாரிகள் குடியிருப்பில் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். ராஜஸ்தானை சேர்ந்த இவர் பீகாரை சேர்ந்த ரேணு தன்வாரைகாதலித்து 2022ல் திருமணம் செய்து கொண்டார். ரேணு தன்வார், டெல்லி கன்டோன்மெண்ட் பகுதியில் ராணுவ பெண் கேப்டனாக பணிபுரிந்தார். கணவர் இறந்த தகவல் அறிந்ததும் ராணுவ பெண் கேப்டன் ரேணு தன்வாரும் நேற்று ஆபீசர்ஸ் மெஸ்சில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.








