கோலாலம்பூர்:
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு மொத்தமாக RM421 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மடானி அரசின் மூன்றாவது வரவு செலவுத் திட்டம் மூன்று பிரதான செயல்முறைகளைப் பின்பற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன, முதலாவதாக பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளிப்பது, அடுத்து மாற்றத்தை உருவாக்குவது மற்றும் மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வது,” என்று, இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
மேலும் 2025ஆம் ஆண்டில் நாட்டின் கடன் தொகையை 80 பில்லியனுக்குக் குறைக்க மடானி அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது என்று கூறிய பிரதமர், இந்திய சமூகத்திற்கு அரசாங்கம் RM130 மில்லியன் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது என்றார்.
இந்த நிதி சமூக, புத்தாக்கம், மற்றும் பல்வேறு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.








