கோலாலம்பூர்:
சமீபகாலமாக நாட்டில் புற்று நோய்கள் அதிகரித்து வருகின்றன. இதில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக மார்பகப் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இந்தியப் பெண்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டில் பதிவானதைக் காட்டிலும் கடந்து 5 ஆண்டுகளில் 23 பெண்களில் ஒருவர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக மார்பக மற்றும் நாளமில்ல அறுவை சிகிச்சை சேவை பிரிவு தலைவர் டத்தோ டாக்டர் இமி சைரி அப்துல் ஹாடி கூறினார்.
இதில் குறிப்பாக 17 இந்தியப் பெண்களில் ஒருவர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வு காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து 19 சீனப் பெண்களில் ஒருவருக்கும் 26 மலாய் பெண்களில் ஒருவருக்கும் மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
2020-ஆம் ஆண்டுக்கு முன்னர் 27 பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.
ஆனால் புகைபிடித்தல், மது அருந்துதல், உணவுமுறை போன்ற காரணங்களால் மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது என்றார் அவர்.








