ஜோகூர்:
ஜோகூர் சுல்தான் இப்ராகிம் அவர்களின் அதிகாரப்பூர்வ பிறந்தநாளை முன்னிட்டு (மார்ச் 23, 2026), ஜோகூர் மாநில மந்திரி பெசார் மற்றும் அரச பிரதிநிதி ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
தனது முகநூல் (Facebook) பக்கத்தின் வாயிலாக சுல்தானுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஆன் ஹபீஸ் காசி (Datuk Onn Hafiz Ghazi) .
மார்ச் 23, 2026 அன்று சுல்தானின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இது ஹிஜ்ரி காலண்டரின் படி ஷவ்வால் 3, 1447 (3 Syawal 1447) ஆகும்.
மன்னர் நீடூழி வாழவும், ஜோகூர் மாநிலம் மேன்மேலும் செழிக்கவும் அவர் இறைவனிடம் பிரார்த்தனை செய்துள்ளார்.
அதேநேரம் ஜோகூர் அரச பிரதிநிதி துங்கு மஹ்கோத்தா இஸ்மாயில் (Tunku Mahkota Ismail) அவர்களும், “அல்லாஹ் சுல்தானைப் பாதுகாப்பானாக” எனத் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.
























