டாமன்சாரா நாடாளுமன்றத் தொகுதியின் ஏற்பாட்டில் தீபாவளி அன்பளிப்பு

தீபாவளி திருநாளை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினரும் இலக்கியவியல் துறை அமைச்சருமான கோபிந்த் சிங் டியோ தலைமையில் டாமன்சாரா டாமாய் வட்டாரத்தை சேர்ந்த வசதி குறைந்த 600 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கப்பட்டது. 99 ஸ்பீட் மார்ட் ஆதரவுடன் இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் மொத்தம் அத்தொகுதியில் 1,500 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கப்படவிருக்கிறது என்று கோபிந்த் சிங் டியோவின் அரசியல் செயலாளர் சுரேஷ் சிங் தெரிவித்தார்.

டாமன்சாரா நாடாளுமன்ற தொகுதியில் சில மேம்பாட்டுடன்  இத்தீப திருநாளை கொண்டாடவிருக்கின்றோம். உதாரணத்திற்கு தீபாவளிக்காக அன்பளிப்பாக உணவுப் பொருட்களை மட்டுமே வழங்காமல் 200 பேருக்கு மேல் அவர்களின் வியாபாரத்திற்கான பொருட்களை வாங்கி தந்து சிறு தொழில் வர்த்தகர்களாக உருவாக்கி  இருக்கிறோம். வறுமையில் இருப்பவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் சேவையாற்றி வருகிறோம். டாமன்சாரா மக்களுக்கு உதவவே நாடாளுமன்ற உறுப்பினரும் இலக்கியவியல் துறை அமைச்சருமான கோபிந்த் சிங் டியோ  இருக்கிறார் என்பதனையும் இந்த வேளையில் தெரிவித்துக் கொள்கிறோம்.

இது உங்கள் அரசாங்கம். தீபாவளிக்கு மட்டுமல்லாமல் இத்தொகுதியிலுள்ள அரசு சாரா இயக்கங்கள் பள்ளிகள் உள்ளிட்டவைகளுக்கு 21 லட்ச ரிங்கிட்டை செலவு செய்திருக்கிறோம். மடானி அரசாங்கம் இனம் மதம் பாராமல் அனைவரும் மலேசியர்கள் என்ற முறையில் உதவிகளை வழங்கி வருகிறோம்.

தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினரும் இலக்கியவியல் துறை அமைச்சருமான கோபிந்த் சிங் டியோ 99 ஸ்பீட் மார்ட் ஆதரவில் இந்த தீபாவளி அன்பளிப்பினை வழங்கியிருக்கிறோம். மடானி அரசாங்கத்தின் கீழ் அனைத்து மலேசியர்களின் நலன் பாதுக்காக்கப்படும் என்றார். தீபாவளியை  அனைவரும் மகிழ்ச்சியுடன் குதூகலத்துடன் கொண்டாடி மகிழுமாறு அவர் கேட்டுக் கொண்டதோடு தனது அன்பான  தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here