2025 வரவு செலவுத் திட்டம்: அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு எரிபொருள், கல்வி மானியங்கள் இல்லை

கோலாலம்பூர்:

நாட்டின் பிரதமரும் நிதியமைச்சருமான அன்வார் இப்ராஹிம், RM421 பில்லியன் மதிப்பிலான வரவுசெலவுத் திட்டத்தை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதில் அதிக வருமானம் ஈட்டுவோருக்கு எரிபொருள், கல்வி மானியங்கள் வழங்கப்படாது என்று அவர் தெரிவித்தார். அதாவது இலக்கு சார்ந்த திட்டங்கள் மூலம் எரிபொருள், கல்வி மானியங்கள் வழங்குவது கட்டுப்படுத்தப்படும்
என்றார்.

அதிக வருமானம் ஈட்டுவோருக்கான RON 95 ரக பெட்ரோல் மானியம் 2025ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் ரத்து செய்யப்படும் என்று பிரதமர் அக்டோபர் 18ஆம் தேதியன்று தெரிவித்தார்.

மேலும் அவர்கள் இவ்வளவு நாள்களாகப் பெற்றுவந்த கல்வி மானியங்கள் படிப்படியாகக் குறைக்கப்படும் என்றார் அவர்.

எஞ்சியுள்ள 85 விழுக்காடு மலேசியர்களுக்கான 12 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள மானியம் தொடரும் என்று பிரதமர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here