நியூயார்க் நகரத்தில் தொடங்கிய காமிக் கான் நிகழ்ச்சி: விதவிதமான வேடமணிந்து கலந்து கொண்ட ரசிகர்கள்

நியூயார்க்: நியூயார்க் நகரத்தில் நடைபெற்ற காமிக் கான் நிகழ்ச்சியில் உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த காமிக் கான் ரசிகர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். காமிக் கதைகளையும் சூப்பர் ஹீரோ படங்களையும் விரும்புவோர் ஆண்டுதோறும் ஆவலோடு எதிர்பார்க்கும் நிகழ்ச்சி காமிக் கான். உலகின் பல்வேறு பகுதிகளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் காமிக் கான் நிகழ்ச்சி சர்வதேச அளவில் புகழ் பெற்றது. நடப்பாண்டுக்கான நியூயார்க் காமிக் கான் பிரமாண்டமாக தொடங்கியது.

அங்குள்ள மையத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. முதல் நாளே ஸ்பைடர் மேன், இளவரசி லே, பிரிடேட்டர் என காமிக் கதாபாத்திரங்கள் போல வேடமிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அக்டோபர் 20ம் தேதி வரை காமிக் கான் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஹாலிவுட் பிரபலங்கள் பலர் இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளனர். எனவே ராசிகர்களும் அதிகம் வருவார்கள் என்பதால் 672 கோடி ரூபாய் வரை இதன் மூலம் நியூயார்க் நகர சுற்றுலா துறைக்கு வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here