அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – 3 பேர் பலி

வாஷிங்டன்,அமெரிக்காவின் மிசிசிபி மாகாணம் ஹொல்மெஸ் நகரில் பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் அப்பகுதியை சேர்ந்த பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.

இதையடுத்து, இந்த வெற்றியை கொண்டாட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்ற நிலையில அப்போது அங்கு அந்த இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீஸார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here