ஈப்போ:
மெங்லெம்புவின் புறநகர்ப் பகுதிக்கு அருகேயுள்ள புக்கிட் கிளெடாங் மலையில் நடைபயணம் மேற்கொண்டபோது முதியவர் ஒருவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்த 71 வயதான கூன் ஸ்வீ லாங் என அடையாளம் காணப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பான தகவல் நேற்று மாலை 4.24 மணிக்கு கிடைத்தது என்றும் பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் (செயல்பாட்டுப் பிரிவு) சபரோட்ஸி நோர் அமாட் கூறினார்.
“பாதிக்கப்பட்டவருக்கு ஆரம்பத்தில் சோர்வு மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது, அதன் பின்னர் தீயணைப்பு வீரர்கள் ஆரம்ப சிகிச்சையை வழங்கினர், ஆனால் அதே இடத்தில் இருந்த ஒரு மருத்துவ அதிகாரி பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தினார்,” என்று அவர் நேற்றிரவு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரின் உடல் மேலதிக நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சபரோட்ஸி மேலும் கூறினார்.









