மோட்டார் சைக்கிளோட்டியை மோதி விட்டு தப்பியோடிய ஓட்டுநரை தேடும் போலீசார்

கோலாலம்பூர்: Kajang Dispersal Link Expressway (சில்க் விரைவுச்சாலை)நேற்று மாலை 4 மணியளவில் பலகோங் நோக்கிச் செல்லும் கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். காஜாங் காவல்துறைத் தலைவர் நஸ்ரோன் அப்துல் யூசோப் கூறுகையில், கார் மோட்டார் சைக்கிளின் பின்னால் வலது பாதையில் இருந்தது. அதை முந்திச் சென்று மோட்டார் சைக்கிளின் பாதையில் வளைந்து விபத்துக்குள்ளானது.

45 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தலையில் பலத்த காயம் அடைந்து செர்டாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 பிரிவு 42(1)ன் கீழ் கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் வாகனம் ஓட்டியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தகவல் அறிந்தவர்கள் விசாரணை அதிகாரி அம்மார் தாஹிரை 018-2586153 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு நஸ்ரோன் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here