பினாங்கில் வெளிநாட்டவர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை

ஜார்ஜ் டவுன்:

பூலாவ் டிக்கஸில் பாகிஸ்தானியர் ஒருவரை உள்ளூர்காரர் என நம்பப்படும் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் மாலை 5 மணியளவில் நடந்ததாகவும், பலத்த காயங்களுக்குள்ளான அவர் ஜாலான் டத்தோ கெராமாட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் வடகிழக்கு காவல்துறையின் பதில் தலைவர் சுப்ரிண்டன்ட் லீ ஸ்வீ சேக் தெரிவித்தார்.

உயிரிழந்தவரின் சடலம் பினாங்கு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது” என்று கூறிய அவர், சம்பந்தப்பட்ட சந்தேக நபரைக் கண்டறிதல் மற்றும் சம்பவத்திற்கான காரணம் உள்ளிட்டவை தொடர்பில் மேலதிக விசாரணைகள் இன்னும் நடந்து வருவதாக அவர் கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் கொலைக்கான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here