14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த மாற்றாந்தந்தைக்கு 5 ஆண்டுகள் சிறை

சிரம்பான்:

டந்த செப்டம்பரில், தனது மனைவியின் 14 வயது மகளை உடல் ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்த விநியோக நிறுவனத்தின் களஞ்சிய தொழிலாளிக்கு, இன்று செஷன்ஸ் நீதிமன்றம், ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு பிரம்படி தண்டனையும் விதித்தது.

நீதிபதி டத்தின் சுரிதா புடின் முன்நிலையில், 27 வயதான குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஒரு மொழிபெயர்ப்பாளரால் வாசிக்கப்பட்ட பின்னர், அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இரண்டு குற்றச்செயல்களும் செப்டம்பர் 28 அன்று தாமான் சிரம்பான் ஜெயாவில் உள்ள ஒரு வீட்டில் காலை 10 மணியளவில் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

எனவே, குற்றம் சாட்டப்பட்டவர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் (AKSTKK) 2017 இன் பிரிவுகள் 14(a) மற்றும் 14(b) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்படக்கூடிய ஒரு குற்றத்தைச் செய்துள்ளார். இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனையும், பிரம்படியும் விதிக்கப்படலாம்.

இவ்வழக்கில் குற்றவாளி தரப்பில் எந்த ஒரு வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. இருப்பினம் மேன்முறையீட்டில் குற்றம் சாட்டப்பட்டவர் மாதம் 2,000 ரிங்கிட் சம்பாதிப்பதாலும், அவர் ஒரு குழந்தை, மனைவி, மூன்று உடன்பிறப்புகள் மற்றும் தந்தை ஆகியோரை பராமரிப்பதால் தனக்கு குறைந்த சிறைத் தண்டனையை கோரினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here