ஆற்றில் தவறி விழுந்த ஆடவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது

சுங்கை பட்டாணி:

கோத்தா கோல மூடா, பசார் பிசிக் என்ற இடத்தில், நேற்று ஆற்றில் விழுந்த ஒருவர் நீரில் மூழ்கி இறந்ததாக அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக மதியம் 12.41 மணிக்கு தமது துறைக்கு அழைப்பு வந்ததாக திகாம் பத்து தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் முகமட் சுக்ரி ஹாஷிம் கூறினார்.

உடனே ருட்சுவான் ஹுசைன் தலைமையிலான திகாம் பத்து தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய உறுப்பினர்கள் குழு மற்றும் அவசர மருத்துவ சேவைகள் (EMRS) உறுப்பினர்கள் உட்பட 13 உறுப்பினர்கள் அந்த இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர் என்றார் அவர் சொன்னார்.

“சம்பவ இடத்திற்கு வந்ததும், நீரின் மேற்பரப்பில் ஆரம்ப தேடல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், பாதிக்கப்பட்டவரைத் தேடும் நடவடிக்கை நான்கு மீன்பிடி படகுகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது என்றார்.

“தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கை பாதுகாப்பு காரணங்களுக்காக மாலை 6.56 மணிக்கு இடைநிறுத்தப்பட்டு இன்றும் மீண்டும் தொடர்கிறது ” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here