சிகாமாட்டில் கொலையில் முடிந்த தகராறு; அறுவர் கைது

சிகாமாட்:

கடந்த வியாழன் அன்று பத்து ஆனாமில் உள்ள தாமான் செஜாத்தில், மோட்டார் சைக்கிளின் இரைச்சலால் ஏற்பட்ட வாய்த்தகராறு, இறுதியில் ஒரு ஆடவரின் மரணத்திற்கு வழிவகுத்தது.

இந்தசண்டையில் ஈடுபட்டதாக நம்பப்படும் பதின்ம வயதிலிருந்து 40 வயதுக்குட்பட்ட ஐந்து ஆண்களும் ஒரு பெண்ணும் நேற்றுக் காலை கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தீபாவளி அன்று இரவு 9 மணியளவில், தவறான புரிதலால் ஏற்பட்ட சண்டை குறித்து காவல்துறைக்கு ஒரு புகார் கிடைத்தது என்று, சிகாமாட் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரின்டண்ட் அமாட் ஜம்ரி மரின்சா நேற்று இரவு வெளியிட்ட ஒரு அறிக்கையில்
கூறினார்.

ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் உயிரிழந்தவர் பாராங்கத்தியால் வெட்டப்பட்டதாக தெரியவந்ததாக கூறிய அவர், வாக்குவாதத்தை நிறுத்த முயன்ற அவரது நண்பர்களும் இத்தாக்குதலால் காயமடைந்தனர் என்று சொன்னார்.

பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் நண்பர்கள் அதிருப்தியின் காரணமாக சந்தேக நபர்களின் குடும்பத்திற்கு சொந்தமான வாகனத்தை சேதப்படுத்தியதாக அவர் மேலும் கூறினார்.

“இந்த வழக்கு 148/302 மற்றும் குற்றவியல் சட்டத்தின் 147/427 பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றும், பிரதான சந்தேகநபருக்கு ஏழு முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பதும் சோதனையில் தெரியவந்துள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here