பெங்களூரு,கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுராவை சேர்ந்தவர் குருபிரசாத் (வயது 52). இவர், கன்னட திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் இருந்து வருகிறார். பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா மாதநாயக்கனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட டாடா நியூ கெவன் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து கடந்த 1½ ஆண்டுகளாக இயக்குனர் குருபிரசாத் தங்கி இருந்தார். அவர் தனது முதல் மனைவியை பிரிந்து விட்டார்.
2-வதாக சுமித்ரா என்பவரை திருமணம் செய்து அடுக்குமாடி குடியிருப்பில் குருபிரசாத் வசித்து வந்தார். இதற்கிடையில், கடந்த சில நாட்களாக குருபிரசாத் வெளியே நடமாடவில்லை. வீட்டில் இருந்து துர்நாற்றமும் வீசியதால், அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.