திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மூணாறு அரசு கல்லூரியின் பொருளாதாரத் துறையின் முன்னாள் தலைவர் ஆனந்த் விஸ்வநாதன் மீது மாணவிகள் அளித்த பாலியல் புகார் வழக்கில், 10 ஆண்டுகள் நீண்ட போராட்டத்துக்கு பின் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
2014 ஆம் ஆண்டில், தேர்வின்போது காப்பி அடித்ததாகப் பிடிக்கப்பட்ட மாணவிகள், அவருக்கு எதிராக பாலியல் புகார் அளித்தனர். அந்த வழக்கின் பேரில் விசாரணை நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஆனால் விசாரணை நடைபெறும் போது, மாணவிகள் தேர்வில் காப்பி அடித்ததும், அதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பேராசிரியருக்கு எதிராக பழிவாங்கும் நோக்கில் புகார் அளித்ததும் தெரியவந்தது.
இதனை பரிசீலித்த உயர்நீதிமன்றம், பேராசிரியர் ஆனந்த் விஸ்வநாதனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்று தீர்ப்பளித்து, அவரை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்தது




















