இன்று காலை நாட்டின் வட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை, புயலுக்கு வாய்ப்பு

கோலாலம்பூர்:

தீபகற்ப மலேசியாவின் வடக்கு பகுதியின் பெரும்பாலான இடங்களில் இன்று காலை இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.

பகாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களின் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மெட்மலேசியா தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

எனினும், கிளந்தான், திரெங்கானு, கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா ஆகிய பகுதிகளில் இன்று காலை வெயிலுடன் கூடிய வானிலை நிலவும் எனவும் அது கூறியுள்ளது.

மேலும் சபாவின் தாவாவ், சண்டாக்கான், கூடாட் மற்றும் லாபுவான் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் மேற்கு கடற்கரையில் வெயில் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மிரி மற்றும் லிம்பாங், சரவாக் ஆகிய இடங்களில் பல இடங்களில் மழை பெய்யும் என்றும், கூச்சிங், செரியான், சமரஹான், ஸ்ரீ அமான், பெடோங், சரிகேய், சிபு, மூக்கா, கபிட் மற்றும் பிந்துலு ஆகிய இடங்களில் வெயிலாக இருக்கும் என்றும் வானிலை முன்னறிவிப்பில் அது தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கோலாலம்பூருக்கு அருகிலுள்ள பெரும்பாலான இடங்களில் இன்று மாலைக்குள் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் மெட்மலேசியா கணித்துள்ளது.

பெர்லிஸ், கெடா, பினாங்கு, பகாங், சிலாங்கூர், புத்ராஜெயா மற்றும் ஜோகூர் அருகே பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் பேராக், கிளந்தான், திரெங்கானு, நெகிரி செம்பிலான் மற்றும் மமலாக்காவின் பல பகுதிகளிலும் இந்த வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here