கோலாலம்பூர்: இந்திய சமூகம் மற்றும் மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவின் (மித்ரா) விவகாரங்கள் தொடர்பான கேள்விகள் மற்றும் பிரச்சினைகளுக்கு பதிலளிக்க தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர் ரமணனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ரமணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்ற மித்ரா உள்ளிட்ட இந்திய சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் நடந்த சிறப்புக் கூட்டத்தில் இந்த விஷயம் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இந்திய சமூகத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான கருத்துகள் மற்றும் யோசனைகள் குறித்து விவாதிக்க இந்த கூட்டம் நடைபெற்றது. இந்திய சமூகம் தொடர்பான திட்டங்களை ஒருங்கிணைத்து அதிகரிக்குமாறு தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சகத்திற்கு (KUSKOP) பிரதமர் அறிவுறுத்தினார்.
அந்த நோக்கத்திற்காக, தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர் ரமணன் இந்திய சமூகத்திற்கான 2025 பட்ஜெட் ஒதுக்கீடு அதன் இலக்குகளை அடைவதை உறுதிசெய்யும் பொறுப்பு என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.









