ஜோகூர் பாரு:
திங்கள்கிழமை அதிகாலை பாசீர் கூடாங் நெடுஞ்சாலையின் KM 14 இல் போக்குவரத்துக்கு எதிராக வாகனம் ஓட்டி, விபத்தினை ஏற்படுத்திய
காணொளி தொடர்பில் லோரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஹோண்டா சிவிக் காரும், லோரியும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஆலம் மாவட்ட காவல்துறை தலைவர், முகமட் சொஹைமி இஷாக் உறுதிப்படுத்தினார்.
“திங்கட்கிழமை அதிகாலை 2:00 மணியளவில் இந்தோனேசியாவைச் சேர்ந்த 18 வயது இளைஞன் ஒருவன், வலது பக்கப்பாதையில் ஹோண்டா சிவிக் காரை ஓட்டிச் சென்றபோது, திடீரென எதிரே வந்த லோரியை போக்குவரத்துக்கு எதிராக ஓட்டிச் சென்றபோது விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.”
“கார் ஓட்டுநர் லோரியைத் தவிர்க்க முயன்றார், ஆனால் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையின் வலது பக்கத்தில் சரிந்தது, இதனால் அவர் சிறு காயங்களுக்கு உள்ளானார் மற்றும் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றார், ”என்று சோஹைமி இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 42(1)ன் கீழ் வழக்கு விசாரணை செய்யப்பட்டு, லோரி ஓட்டுநரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்று அவர் சொன்னார்.








