16 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகத்தைப் பாவிக்க தடை; ஆஸ்திரேலியா பரிந்துரை

சிட்னி:

ஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்களை சமூக ஊடகத்தை பயன்படுத்துவதை தடைசெய்வதற்கான சட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் அமல்படுத்தப்போவதாக பிரதமர் அந்தோனி அல்பானிஸ் தெரிவித்துள்ளார்.

இந்தத் தடை 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் நடப்புக்கு வரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

“சமூக ஊடகம் நமது குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்கிறது. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறேன்,” என்று அல்பானிஸ் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் கூறினார்.

சமூக ஊடகத்தை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் குழந்தைகளின் உடல், மன ஆரோக்கியத்திற்கு ஏற்படக்கூடிய அபாயங்களை அவர் சுட்டினார்.

16 வயதுக்குக் கீழ் உள்ளவர்களை சமூக ஊடகத்தில் தடைசெய்யும் சட்டம் 2024ல் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு ஒப்புதல் அளிக்கும் 12 மாதங்களில் அது நடப்புக்கு வரும் என்று அவர் சொன்னார்.

இந்நிலையில், எதிர்க்கட்சியும் அந்தத் தடைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. பெற்றோர் அனுமதி உள்ளவர்களுக்கோ ஏற்கெனவே கணக்குகள் வைத்திருப்பவர்களுக்கோ விலக்கு அளிக்கப்படாது.

“அனுமதியைத் தடுக்க, தாங்கள் தகுந்த நடவடிக்கைகள் எடுப்பதைக் காட்டுவது சமூக ஊடகத் தளங்களின் பொறுப்பாகும். அது பெற்றோர், இளையோரின் கடமை அல்ல,” என்று அல்பானிஸ் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here