ராஜஸ்தானில் பிளாஸ்டிக் போன்ற கடினத்தன்மை கொண்ட தோலுடன் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ள அரிதினும் அரிதான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிகானர் பகுதியில் உள்ள நோக்கா [Nokha] நகரரை சேர்ந்த பெண்ணுக்கு பிரசவத்தில் இந்த தன்மையோடு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. ஆண் குழந்தை எடை 1.5 கிலோவாகவும், பெண் குழந்தை எடை 1.53 கிலோவாகவும் இருந்துள்ளது.
இதற்கு ஹார்லெக்வின் வகை இக்தியோசிஸ் [Harlequin-type ichthyosis] என்று மருத்துவத்தில் பெயர் உண்டு. மிகவும் அரிதான இந்த தன்மை கொண்ட குழந்தைகள் இந்தியாவில் பிறப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
இந்த இரட்டை குழந்தைகளின் ஆயுட்காலம் சில வருடங்கள் மட்டுமே என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். சில குறிப்பிட்ட நிலைகளில் வளரிளம் பருவம் வரை உயிர்பிழைத்திருக்க முடியும் வேண்டும் தெரிவிக்கின்றனர்.