மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ மதுபானக் கூடத்தில் புகுந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த சனிக்கிழமை (நவ.,9) நள்ளிரவில் மெக்சிகோவின் தலைநகரான குவர்ட்டாரோவில் உள்ள மதுபானக் கூடத்திற்குள் துப்பாக்கிகளுடன் 4 பேர் கொண்ட கும்பல் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுள்ளது. இதில், அங்கு மது அருந்திக் கொண்டிருந்த 7 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், 7 பேர் பலத்த காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு நபரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் பயன்படுத்திய வாகனத்தை சோதனையிட்டனர்.இதனிடையே, தாக்குதல் நடத்தியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும், எல்லைகளில் தொடர்ந்து பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும் குவாரெட்டரோ கவர்னர் குரி தெரிவித்துள்ளார்.
மெக்சிகோ அதிபராக கிளவுடியா ஷின்பாம் பொறுப்பேற்றது முதல் 2,788 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.