மருத்துவ கல்லூரி விடுதி மீது விழுந்த விமானம்- மாணவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

ஆமதாதாபாத்:

ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானம், மருத்துவ கல்லூரி மாணவர்கள் தங்கி உள்ள விடுதி மீது நொறுங்கியது. இதில் சில மாணவர்கள் உயிர் இழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கிளம்பிய விமானம் சிறிது நேரத்தில் நொறுங்கி விழுந்து

விபத்துக்குள்ளானது. விபத்துக்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. விபத்து தொடர்பாக பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், இந்த விமானம் விமான நிலையம் அருகே உள்ள பிஜே மருத்துவ கல்லூரி விடுதி மீது நொறுங்கி விழுந்துள்ளது. இதில், அங்கு உணவு அருந்திக் கொண்டு இருந்த மாணவர்கள் சிலர் பலியானதாகவும், காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த புகைப்படங்களும் வெளியாகி உள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here