கோலாலம்பூர்:
இன்று திங்கட்கிழமை (நவம்பர் 11) நண்பகல் வரை எட்டு மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை, கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.
இன்று காலை 8.40 மணிக்கு வெளியிடப்பட்ட எச்சரிக்கையில், கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் சிலாங்கூரில் உள்ள பல மாவட்டங்களான கோலா சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோலா லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகியவை இந்த வானிலையை எதிர்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது.
இவை தவிர பேராக் (கெரியான்), நெகிரி செம்பிலான் (சிரம்பான், போர்ட் டிக்சன் மற்றும் ரெம்பாவ்), பினாங்கு (செபெராங் பிறை செலத்தான்), மற்றும் திரெங்கானு (செத்தியூ, கோல நெராஸ் மற்றும் கோலா திரெங்கானு) ஆகியவை அடங்கும்.
அதேநேரம் சரவாக்கில், கூச்சிங் மற்றும் சமரஹான் (சமரஹான் மற்றும் அசஜயா) போன்ற இடங்களில் இதேபோன்ற வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.









