உக்ரைன் மீது ரஷியா டிரோன் தாக்குதல் – 6 பேர் பலி

கீவ்,உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 990வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்துவருகின்றன. ஆனால் இருநாடுகளும் பேச்சுவார்த்தைக்கு முன்வராததால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைனின் மைகொவ்யா மற்றும் சபோரிஜியா ஆகிய தெற்கு நகரங்கள் மீது ரஷியா நேற்று இரவு டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 23 பேர் படுகாயமடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here