பாப்பார் மருத்துவமனை மருந்தகத்தில் தீச்சம்பவம்; உயிர்ச்சேதம் இல்லை

கோலாலம்பூர்:

பாவில் உள்ள பாப்பார் மருத்துவமனையின் மருந்தகப் பிரிவிலுள்ள ஒரு கடையில் நேற்று தீ சம்பவம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தின் போது எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் Dzulkefly Ahmad சமூக வலைதளமான X இல் பதிவிட்டிருந்தார்.

மருத்துவமனையில் உள்ள அனைத்து நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அவர்களை உடனே வெளியேற்றுவது உட்பட அனைத்து வளங்களையும் அமைச்சகம் கவனம் செலுத்துகிறது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here