மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-அனைத்து எதிர்க்கட்சிகளும் விசாரணை அமைப்புகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், தேர்தல் ஆணையம் ஆகியவற்றை தாக்கி தற்போது நீதித்துறையை குறிவைக்கின்றன. அவர்கள் இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தையே தாக்குகிறார்கள் என்பதை உணரவில்லை.
அவர்களுக்கு இந்திய மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். வாழ்நாள் பாடம் புகட்டுவார்கள். 1975-ல் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட போது இந்திய ஜனநாயகம் செழித்து வளர்ந்ததா? 1973-ல் காங்கிரஸ் அரசால் 3 மூத்த நீதிபதிகளை புறக்கணித்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி நியமிக்கப்பட்ட போது ஜனநாயகம் நடனமாடியதா?










