ஷா ஆலம்:
இன்று காலை பெய்த கனமழையைத் தொடர்ந்து, பண்டார் செத்தியா ஆலத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு காலை 9.32 மணியளவில் வெள்ளம் தொடர்பில் ஒரு அழைப்பு வந்தது என்று, சிலாங்கூர் மாநில தீயணைப்பு துறை துணை இயக்குனர் (செயல்பாடுகள்) அமாட் முக்லிஸ் முக்தார் கூறினார்.
உடனே காப்பார் தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஆறு தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஒரு தீயணைப்பு இயந்திரம் இந்த சம்பவத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது என்றார்.
ஜாலான் செத்தியா பிரிமா E U13/E இல் பெய்த கனமழையைத் தொடர்ந்து வெள்ள நீர் சுமார் இரண்டு அடிக்கு உயர்ந்தது,” என்று அவர் கூறினார்.








