பாலேக் புலாவ்: பாயான் லெபாஸில் வாடகை வீட்டில் 13 வயது பள்ளி மாணவியை மாறி மாறி பலாத்காரம் செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) அதிகாலை 2 மணியளவில் சம்பவத்தின் போது வீட்டில் இருந்த சந்தேக நபரின் நண்பரும் விசாரணைக்கு உதவுவதற்காக கைது செய்யப்பட்டார்.
நவம்பர் 10 ஆம் தேதி, பாதிக்கப்பட்டவர் ‘சியாவால்’ என்று அழைக்கப்படும் முதல் சந்தேக நபருடன் நள்ளிரவு 12.30 மணியளவில் ரெலாவுக்குச் சென்றார். மேலும் அதிகாலை 2 மணியளவில், பாதிக்கப்பட்டவர் பாயான் லெபாஸில் உள்ள ஜாலான் சுங்கை அரா 3 இல் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார் என்று கூறினார். பாலேக் புலாவ் OCPD Asst Comm Sazalee Adam செவ்வாய்க்கிழமை (நவம்பர் 12) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
வீட்டில் இருந்தபோது, ஒரு அறையில் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சியாவால் உடலுறவு கொண்டதாக ஏசிபி சசலீ தெரிவித்தார். முதல் செயலுக்குப் பிறகு, அடையாளம் தெரியாத இரண்டாவது சந்தேக நபர் வந்து, பாதிக்கப்பட்டவருடன் உடலுறவில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, மூன்றாவது சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணை அதே வீட்டின் மற்றொரு அறைக்குள் இழுத்து, பாலியல் பலாத்காரம் செய்ததாக ஏசிபி சசலி கூறினார். பின்னர், பாதிக்கப்பட்டவருக்கு மூன்றாவது சந்தேக நபர் முதல் அறைக்குத் திரும்பி மீண்டும் உடலுறவில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினார் என்று அவர் மேலும் கூறினார்.
அதிகாலை 3 மணியளவில்,இரண்டாவது மற்றும் மூன்றாவது சந்தேக நபர்களுடன் “சியாவல்” பாதிக்கப்பட்டவரை மோட்டார் சைக்கிளில் பாயான் பாருவுக்கு அழைத்துச் சென்றார். அவர்களுடன் அதிகாலை 4 மணியளவில், பாதிக்கப்பட்ட பெண் மீண்டும் அதே வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு மூன்று சந்தேக நபர்களும் அவளை மீண்டும் கற்பழித்தனர் அதிகாலை 5 மணியளவில் அவள் வீட்டிற்குத் திரும்பினார்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் மூலம் நட்பாக பழகிய முதல் சந்தேக நபரை, பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தெரியும் என்று விசாரணையில் கண்டறியப்பட்டதாக ஏசிபி சசலீ கூறினார். பலாத்கார சம்பவங்கள் ஒரே வீட்டில் இரண்டு வெவ்வேறு அறைகளில் நடந்ததாக காவல்துறை நம்புவதாகவும் அவர் கூறினார். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார். சந்தேகநபர்கள் 20 முதல் 25 வயதுடையவர்கள் மற்றும் குற்றவியல் சட்டத்தின் 375B பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவார்கள்.








