எதிர்கட்சி வசமிருக்கும் மாநிலங்களில் மட்டும் ஹரிராயா உபசரிப்பா? உண்மையில்லை என்கிறார் பிரதமர்

பாஸ் தலைமையிலான கெடா, கிளந்தான் மற்றும் தெரெங்கானு ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு மாநிலத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதால் Malaysia Madani  ஹரிராயா  திறந்த இல்லத்தை நடத்த அரசாங்கம் முடிவு செய்தது என்ற குற்றச்சாட்டை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  இன்று நிராகரித்தார்.

சிலாங்கூர் உட்பட பல மாநிலங்களும் இதே போன்ற ஹரிராயா திறந்த இல்லம் நடைபெறும் என்று பிரதமர் கூறினார். இல்லை, இல்லை (எதிர்க்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் மட்டும் அல்ல)” என்று அவர் இங்கே பங்சாபுரி பெட்டாலிங் பெர்மாவில் உள்ள மஸ்ஜித் அஸ்-சலாமில் செய்தியாளர்களிடம் சுருக்கமாக கூறினார்.

எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மாநிலங்களை அரசாங்கம் வேண்டுமென்றே தேர்ந்தெடுத்ததாகவும், அடுத்த சில மாதங்களில் அவற்றின் மாநிலத் தேர்தல்களை நடத்துவதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

Aidilfitri 2023 உடன் இணைந்து பிரதமருடனான Malaysia Madani திறந்த இல்ல உபசரிப்பு ஏப்ரல் 29, கிளந்தான் (மே 12) மற்றும் தெரெங்கானு (மே 13) ஆகிய மூன்று மாநிலங்களில் நடைபெறும் என்று நேற்று பிரதமர் துறை (JPM)  அறிவித்தது. சிலாங்கூர், பினாங்கு மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மூன்று திறந்த இல்ல நிகழ்வுகளில் அன்வார் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் JPM கூறியது. முன்னதாக, பிரதமர் மஸ்ஜித் அஸ்-சலாமில் உள்ளூர் மக்களுடன்  வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here