லிமா:
பெரு நாட்டின் உயரிய விருதான “எல் சோல் டெல் பெரு” விருதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பெற்றுக்கொண்டார்.
இந்த விருதை பெரு நாட்டு அதிபர் டினா எர்சிலியா போலுயார்டே ஜெகர்ரா வழங்கிக் கெளரவித்தார்.
இந்த விருது மலேசியாவிற்கு கிடைத்துள்ள ஒரு அனைத்துலக அங்கீகாரம் என்று பிரதமர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஓர் பதிவில் கூறினார்.
ஸ்பெயினில் இருந்து பெரு சுதந்திரம் பெற்ற பிறகு 1821 இல் உருவாக்கப்பட்ட இந்த மதிப்புமிக்க விருது அமெரிக்காவின் மிகப் பழமையான சிவில் கவுரவமாகும்.
இது அனைத்துலக இராஜதந்திரத்தின் வரலாற்று சின்னமாக அமைந்துள்ளது.
பெரு நாட்டின் அரச அரண்மனையில் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது, இந்த விருதினை பிரதமர் பெற்றுக்கொண்டார்.
இந்த விருதினை மலேசிய மக்கள் சார்பாக பெறுவதில் நான் பெருமைப்படுகிறேன் என்றும், மேலும் இந்த விருது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவின் அடையாளம் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அப்பதிவில் கூறினார்.









