அந்த வகையில் வழக்கம்போல போலீஸ் உடை அணிந்து வீடியோ கால் மூலம் மோசடி செய்யலாம் என்று நினைத்த நபர் தவறுதலாக மோசடிகளைத் தடுக்க அமைக்கப்பட்ட கேரள சைபர் செல் அலுவலகத்துக்கே வீடியோ கால் போட்டுள்ளார். திருச்சூர் கேரள சைபர் செல் அதிகாரி ஒருவருக்கு வீடியோ கால் வந்துள்ளது.
அதை அவர் தனது கேமராவை ஆன் செய்யாமல் அட்டண்ட் செய்துள்ளார். எதிர் பக்கம் இருந்த போலீஸ் உடையணிந்த மோசடி காரர் வழக்கம்போல பேசியுள்ளார். தனது கேமரா வேலை செய்யவில்லை என்று போலீஸ் அதிகாரி கூறியுள்ளார், ஆனால் மோசடிக்காரர் கேமராவை ஆன் செய்யும்படி மீண்டும் மீண்டும் கூறியதால் சைபர் போலீஸ் தனது கேமராவை ஆன் செய்தார்.
அதன் பின்னரே தான் வசமாக சிக்கியதை மோசடிக்காரர் உணர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பேசிய சைபர் போலீஸ், இந்த வேலையை செய்யாதீர்கள், என்னிடம் உங்களின் முகவரி, நீங்கள் உள்ள இடம் என அனைத்தும் தெரியும், இது சைபர் செல், இந்த [மோசடி] வேலையை இத்துடன் நிறுத்திக்கொள்வதே உங்களுக்கு நல்லது என்று எச்சரித்துள்ளார். அவர் பேசியது அனைத்தும் வீடியோ ரெக்கார்டிங் செய்யப்பட்ட நிலையில் அதை திருச்சூர் சைபர் போலீஸ் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ 1,77,000 வியூஸ்களை கடந்து வைரலாகி வருகிறது.









