கோலாலம்பூர்:
கையூட்டு பெற்றது, அதிகார துஷ்பிரயோகம் செய்தது போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில்
கடந்த செப்டம்பர் மாதம் வரை 45 போலீஸ் அதிகாரிகள் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டனர்.
கையூட்டு, அதிகார முறைகேடுகளில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று, தேசிய போலிஸ் படை துணைத் தலைவர் டத்தோஶ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை கூறினார்.
அதே காலப்பகுதியில் 40 அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அதில் 13 பேர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
அதேநேரம் புக்கிட் அமானின் ஒருமைப்பாடு, தரநிலைகள் இணங்குதல் துறையினரால் 1,557 பேருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை ஆவணங்களையும், விதிகளை மீறியதாக சந்தேகிக்கப்படும் அதிகாரிகளுக்கு எதிராக 1,118 ஒழுக்காற்று விசாரணை ஆவணங்களையும் திறந்துள்ளது என்று அவர் கூறினார்.