நெங்கிரி மாநில சட்ட மன்ற உறுப்பினராக முஹமட் அஸ்மாவி ஃபிக்ரி பதவி ஏற்றார்

கோத்தா பாரு:

கோத்தா தாருல்நெய்ம் வளாகத்தில் நடைபெற்ற 15வது கிளந்தான் மாநில சட்டமன்றத்தின் இரண்டாவது அமர்வின் மூன்றாவது கூட்டத்தில் முஹமட் அஸ்மாவி ஃபிக்ரி அப்துல் கானி நெங்கிரி மாநில சட்டமன்ற உறுப்பினராக இன்று பதவியேற்றார்.

மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ முகமட் அமர் நிக் அப்துல்லா முன்னிலையில் பதவியேற்ற 38 வயதான முகமட் அஸ்மாவி ஃபிக்ரி, கிளந்தான் மாநில அரசியலமைப்பின்படி தனது கடமைகளை சிறந்த முறையில் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.

கடந்த ஆகஸ்ட் 17 அன்று நடந்த நெங்கிரி இடைத்தேர்தலில், கிளந்தான் அம்னோ இளைஞர் தலைவரான முகமட் அஸ்மாவி ஃபிக்ரி 9,091 வாக்குகளைப் பெற்று பெர்சாத்துவின் முகமட் ரிஸ்வாடி இஸ்மாயிலை 3,352 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here