ரியாத்: சவுதி அரேபியாவில் கடுமையான சட்டத்தால் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஒரே ஆண்டில் 101 பேருக்கு மரணத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர்கள் சென்று பணம் சம்பாதிப்பதில் சவுதியை தான் பலரும் தேர்வு செய்கின்றனர். இந்தியர்களும் அதிகம் செல்லும் நாடாக சவுதி உள்ளது. இங்கு இஸ்லாமிய சட்டங்கள் மிக கடுமையானதாக உள்ளது. குற்றம் புரிந்தவர்களுக்கு குற்றம் நடந்த இடத்தில் கடும் தண்டனை விரைவில் வழங்கப்படுவது வழக்கம்.
இந்த 2024ல் 101 பேருக்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதை மருந்து கடத்தல் ஈடுபட்டவர்களே அதிகம் ஆவர். 2022, 2023 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இது போன்ற தண்டனை பெறுபவர்கள் இந்த ஆண்டு 3 மடங்கு அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் காரர்களே அதிகம்:இந்த ஆண்டு தண்டனை பெற்றவர்களில் பாகிஸ்தானியர்களே அதிகம் அடங்குவர். தண்டனை பெற்ற நாட்டவர்கள் விவரம் வருமாறு: