திடீரென வெடித்த ஹேர் ட்ரையர்.. கை விரல்களை இழந்த ராணுவ வீரரின் மனைவி

கர்நாடகாவில் பார்சலில் வந்த ஹேர் ட்ரையர் வெடித்துச் சிதறியதில், பசவராஜேஸ்வரி என்பவரின் காய் விரல்கள் துண்டானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகா மாநிலம் பாகல்காட் பகுதியில் சசிகலா, பசவராஜேஸ்வரி என்ற 2 பெண்கள் அக்கம்பக்கத்து வீடுகளில் வசித்து வருகின்றனர். பசவராஜேஸ்வரியின் கணவர் ராணுவத்தில் பணியாற்றும்போது உயிரிழந்தார்.

இந்நிலையில் சசிகலாவுக்கு ஒரு ஹேர் ட்ரையர் பார்சல் வந்துள்ளது. ஆனால் சசிகலா ஊரில் இல்லாததால் அந்த பார்சலை வாங்கி ஹேர் ட்ரையர் வேலை செய்கிறதா என்று பார்க்குமாறு பசவராஜேஸ்வரிவிடம் சசிகலா கூறியுள்ளார்.இதனையடுத்து ஹேர் ட்ரையர்-ஐ வாங்கிய பசவராஜேஸ்வரி அது எப்படி வேலை செய்கிறது என்று சோதித்து பார்ப்பதற்காக ஆன் செய்துள்ளார். அப்போது திடீரென ஹேர் ட்ரையர் வெடித்து சிதற பசாம்மாவின் முகம், கைகளில் கடுமையாக காயம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக பசவராஜேஸ்வரியை உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த வழக்கின் விசாரணையில் சசிகலா ஹேர் ட்ரையர் எதுவும் ஆர்டர் செய்யவில்லை என்று கூறியது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், ஷார்ட் சர்க்யூட் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. தற்போது சசிகலாவிற்கும் பசவராஜேஸ்வரிக்கும் ஏதேனும் முன்விரோதம் இருந்ததா என்ற கோணத்தில் போலீஸார்  விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here