திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பிப்ரவரி மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கான அங்கப்பிரதட்சணம் டோக்கன்களை ஆன்லைனில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடுகிறது. பிப்ரவரி மாதத்துக்கான ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் ஒதுக்கீடு நாளை காலை 11 மணிக்கு வெளியாகிறது.

முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிப்ரவரி மாதம் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்ய இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் ஒதுக்கீடு நாளை மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியாகிறது.

பிப்ரவரி மாதத்துக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு (ரூ.300 தரிசன டிக்கெட்) 25-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது. திருமலை மற்றும் திருப்பதியில் பிப்ரவரி மாதத்துக்கான அறை ஒதுக்கீடு 25-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு பக்தர்கள் https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் மூலம் ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here