ஆறு மாநிலங்களுக்கு தொடர்மழை எச்சரிக்கை

கோலாலம்பூர்:

கிளந்தான், திரெங்கானு மற்றும் பகாங் உட்பட நாட்டின் 6 மாநிலங்களில் வரும் நவம்பர் 29 ஆம் தேதி வரை தொடர் மழை பெய்யும் என்று மலேசிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திரெங்கானு, கிளந்தான் (தும்பாட், பாசிர் மாஸ், கோத்தா பாரு, ஜெலி, தானா மேரா, பச்சோக், மச்சாங், பாசிர் பூத்தே மற்றும் கோலக் கிராய்) மற்றும் பகாங் (ஜெரான்துட், குவாந்தான், பெக்கான் மற்றும் ரோம்பின்) ஆகிய பகுதிகள் இந்த தொடர்மழையை பெறும் என்று, மெட்மலேசியா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேபோன்ற எச்சரிக்கை வரும் செவ்வாய் முதல் வெள்ளி வரை, பெர்லிஸ், கெடா (குபாங் பாசு, போகோக் சேனா, பாடாங் தெராப், பெந்தோங், சிக் மற்றும் பாலிங்), பஹாங் (கேமரன் ஹைலேண்ட்ஸ், லிப்பிஸ், ரவூப், தெமெர்லோ, மாரான் மற்றும் பெரா) ஆகியவற்றையும், பேராக் (உலு பேராக்) மற்றும் கிளந்தான் (குவா முசாங்) ஆகிய பகுதிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here