கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 76 பேர் அங்குள்ள 2 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

கோத்தா பாரு:

கிளந்தானில் வெள்ளம் காரணமாகே தமது வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்ட 76 பேர் அங்குள்ள இரண்டு நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 44 பேர் SMK பச்சோக்கில் இருந்தும், மேலும் 32 பேர் ரந்தாவ் பஞ்ஜாங்கில் உள்ள SK குவால் டோக் தேஹ்வில் இருந்தும் வெளியேற்றப்பட்டனர்.

நேற்றிரவு முதல் லேசான மழை மட்டுமே பெய்து வருவதால், இன்று காலை வெள்ள நிலைமை சற்று சீரடைந்ததுள்ளதுடன், கோலோக் ஆற்றின் நீர்மட்டமும் குறைந்துள்ளது.

இந்நிலையில், கடந்த நவம்பர் 5 ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை மார்ச் 2025 வரை நீடிக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது, கிளந்தான், திரெங்கானு, பகாங், ஜோகூர், சரவாக் மற்றும் சபா ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here