கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் போலீஸ் தலைமையகத்தில் காவலில் இருந்தபோது 30 வயதான வெளிநாட்டவர் மரணமடைந்தார் என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் உமர் கான் கூறினார். அந்த நபர் இங்கிலாந்தில் இருந்து தாய்லாந்தின் புக்கிட்டிற்கு KLIA வழியாக பயணித்துக் கொண்டிருந்தபோது, மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவித்ததால் சனிக்கிழமையன்று மதியம் 1.30 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட போது, அவர் ஆக்ரோஷமாகச் செயல்பட்டு காவல்துறைக்கு சொந்தமான பல பொருட்களுக்கு சேதம் விளைவித்ததோடு மேலும் இரண்டு போலீசார் மற்றும் ஒரு துணை போலீஸ்காரருக்கு காயத்தை ஏற்படுத்தினார் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார். பின்னர் அந்த நபர் இடையூறு செய்ததற்காகவும் தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்தியதோடு மற்றும் காவல்துறையினரும் அவர்களின் கடமைகளைச் செய்யவிடாமல் தடுத்தார் என்று ஹுசைன் தெரிவித்தார்.
ஆவணங்கள் சமர்ப்பிக்கும் பணியின் போது, கைதி மயங்கி விழுந்தார். போலீசார் உடனடியாக மருத்துவ உதவியை நாடினர். அவர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்பு அவருக்கு மருத்துவரால் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. செர்டாங்கில் உள்ள சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையில் நேற்று பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் ஆய்வின் முடிவுகள் நிலுவையில் உள்ள மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஹுசைன் கூறினார். இந்த வழக்கு தொடர்பாக சுயாதீன போலீஸ் நடத்தை ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. புக்கிட் அமானின் நேர்மை மற்றும் தரநிலை இணக்கத் துறையும் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.









