கார் கழுவும் இடத்தில் ஃபெராரி கார் திருட்டு தொடர்பில் ஒரு பெண் உட்பட 6 பேர் கைது

ஷா ஆலம்: உலு கிளாங் கார் கழுவும் இடத்தில் நவம்பர் 17 அன்று ஃபெராரி கார் திருடப்பட்டது தொடர்பாக ஒரு பெண் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஐந்து உள்ளூர் சந்தேக நபர்களும் ஒரு வெளிநாட்டவரும் தனித்தனியாக கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் ஒமர் கான் தெரிவித்தார். கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நான்கு கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர் – ஒரு ஃபெராரி, ஒரு நாசா சூரியா மற்றும் இரண்டு BMW கார்கள்.

எட்டு மொபைல் போன்கள், ஃபெராரியின் ஒன்று உட்பட இரண்டு சாவிகள், ஒரு ஸ்லிங் பேக், ஒரு மலேசிய பாஸ்போர்ட் மற்றும் கத்தியுடன் இணைக்கப்பட்ட லேன்யார்டு ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், மூன்று கார் ரிமோட் கண்ட்ரோல்கள், ஒரு வீட்டு அணுகல் அட்டை மற்றும் அதில் ‘டைம்ண்ட்’ என்று எழுதப்பட்ட வெளிப்படையான பிளாஸ்டிக் பொதி ஆகியவை கைப்பற்றப்பட்டன என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

23 மற்றும் 40 வயதிற்குட்பட்ட ஆறு சந்தேக நபர்கள் என்றும் ஒருவருக்கு மட்டுமே இரண்டு போதைப்பொருள் குற்றங்களுக்கான குற்றவியல் பதிவு உள்ளது என்று கூறினார். மூன்று சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இருவர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் டிசம்பர் 3 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அம்பாங் ஜெயா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்னும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் அவர்களது கூட்டாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று அவர் கூறினார். இந்த வழக்கு குற்றவியல் சட்டம் 379A பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here