கபிட் வெள்ளம்; முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி பலி

சிபு:

கபிட்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி இன்று (நவ. 27) முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

பலியானவர் 75 வயதான பங்காவ் ஆம்பிங், என அடையாளம் காணப்பட்டார்.

கபிட் ஃபூச்சோ அசோசியேஷன் பல்நோக்கு மண்டபத்திற்குப் பின்னால் உள்ள பெரிய கால்வாயில் கார் ஒன்று விழுந்தது குறித்து கபிட் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு காலை 7.15 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது என்றும், உடனே தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்ததாகவும் ஊடக பேச்சாளர் கூறினார்.

“பாதிக்கப்பட்டவர் அவரது காருக்குள் சிக்கிக்கொண்டார் என்றும், வலுவான நீரோட்டம் காரணமாக முதியவரை மீட்க்கும் பணி கடினமாக இருந்ததாகவும் அவர் சொன்னார்.

காரில் இருந்து மீட்கப்பட்ட முதியவர்,அப்போது உயிரோடு இருப்பதற்கான அறிகுறிகள் இருக்கவில்லை. இருப்பினும் அந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கபிட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here