இந்தாண்டு பிள்ளைகள் கொடுமைப்படுத்தல் தொடர்பில் 2,240 வழக்குகள் பதிவு

கோலாலம்பூர்:

நாட்டில் கடந்த 8 மாதங்களில் பிள்ளைகள் கொடுமைப்படுத்தப்பட்டது தொடர்பில் மொத்தம் 2,240 வழக்குகள் பதிவாகியுள்ளதாக மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ நான்சி சுக்ரி தெரிவித்துள்ளார்.

இந்த கொடுமைப்படுத்தல் உடல், பாலியல், உணர்ச்சி என மூன்று வகை துஷ்பிரயோகங்களை உள்ளடக்கியது என்றும், அவற்றில் 897 வழக்குகள் உடல் ரீதியான துஷ்பிரயோகம் சார்ந்தவை என்றும், ஏனைய வழக்குகள் 1,260 பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பானவை என்றும், 83 வழக்குகள் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் சார்ந்தவை என்றும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here