ராகுல் பாணியில் பிரியங்கா; அரசியல் சாசன புத்தகத்துடன் எம்.பி.,யாக பதவியேற்பு!

புதுடில்லி:

அரசியல் சாசன புத்தகத்தை கையில் வைத்தபடி, வயநாடு எம்.பி.,யாக இன்று (நவ.,28) பிரியங்கா பதவியேற்று கொண்டார். அவருக்கு அவரது கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

லோக்சபா தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல், ரேபரேலியை தேர்வு செய்ததன் மூலம், வயநாடு காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இதனால் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. முதன்முறையாக, பிரியங்கா போட்டியிட்டு 6,22,338 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவர், 4,10,931 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, சாதனை படைத்தார்.

இந்நிலையில், இன்று (நவ.,28) பார்லிக்கு கேரள பாரம்பரிய உடை அணிந்து வந்து, அரசியல் சாசன புத்தகத்தை கையில் வைத்தபடி, வயநாடு எம்.பி.,யாக பிரியங்கா பதவியேற்றார். பார்லிமென்ட் விவாதம் மற்றும் பொதுக்கூட்டங்களில் அரசியலமைப்பு சாசன புத்தகத்தை கையில் ஏந்தி கொண்டு பேசுவதை, காங்., எம்.பி., ராகுல் வழக்கமாக கொண்டுள்ளார். அதே பாணியில், அரசியல் சாசன புத்தகத்துடன் எம்.பியாக பிரியங்கா பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here