கோலாலம்பூர்:
கிளந்தான், திரெங்கானு, கெடா, பெர்லிஸ், ஜோகூர் மற்றும் பேராக் ஆகிய ஆறு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இன்று காலை 7.30 நிலவரப்படி, 10,743 குடும்பங்களைச் சேர்ந்த 35,261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமூக நலத் துறையின் (JKM) பேரிடர் தகவல் போர்ட்டலின் அடிப்படையில், கிளந்தானில் 8,745 குடும்பங்களை உள்ளடக்கிய மொத்தம் 29,022 பேர் மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில் உள்ள மொத்தம் 150 தற்காலிக வெளியேற்ற மையங்கள் (PPS) தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
திரெங்கானுவில், ஆறு மாவட்டங்களை சேர்ந்த 5,845 பேர் அங்குள்ள 144 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 1,882 குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர்.
அதேநேரம் கெடாவில், 58 குடும்பங்களைச் சேர்ந்த 180 பேர் தங்குவதற்கு அங்கு ஐந்து நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன.
பெர்லிஸில், 166 பாதிக்கப்பட்டவர்களுக்கு இடமளிக்க அங்கு மூன்று PPS திறக்கப்பட்டன என்றும் , ஜோகூரில் 28 பேரும், பேராக்கில் 20 பேரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், இவர்கள் தங்குவதற்கு அங்கு தலா ஒரு நிவாரண மையம் திறக்கப்பட்டது என்று அது மேலும் தெரிவித்துள்ளது.