தெலுங்கானாவில் வாடகை தாயாக வந்த பெண் மர்மமான முறையில் மரணம்

தெலங்கானா மாநிலத்தில் வாடகை தாயாக சென்ற அஷ்விதா என்ற பெண் 9 வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ராயதுர்கம் பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் ராஜேஷ்பாபு (54) என்பவருக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்துள்ளார்.இதற்காக ஒடிசாவைச் சேர்ந்த அஷ்விதா சிங் (25) என்ற பெண்ணிடம் ரூ.10 லட்சம் பணம் தருவதாகக் கூறி ஒப்பந்தம் செய்துள்ளார். பின்னர் அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் அஷ்விதா சிங்கை ராஜேஷ்பாபு தங்கவைத்துள்ளார்.

இந்நிலையில், 9வது மாடியில் கீழ் விழுந்து அஷ்விதா பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அஷ்விதாவின் கணவர் சஞ்சய் சிங் அளித்த புகாரின் பேரில், ராஜேஷ் பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது போலீஸார் விசாரணையில் அஷ்விதா கருப்பமாக இல்லை என்றும் அதற்கான சிகிச்சை அடுத்த மாதம் தான் தொடங்கவுள்ளது என்பதையும் அடுக்குமாடி குடியிருப்பின் 9-ம் மாடியில் இருந்து 7வது மாடி வரை 2

இந்நிலையில், அடிக்கடி அஷ்விதாவிடன் பாலியல் அத்துமீறலில் ராஜேஷ்பாபு ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை ராஜேஷ் பாபுவின் பாலியல் தொல்லை அதிகரிக்கவே அஷ்விதா 9வது மாடியில் இருந்து 7வது மாடியில் உள்ள தனது வீட்டிற்கு சேலை கட்டி இறங்க முயன்றபோது கைகள் நழுவி கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here